அரசின் பல துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

காற்று கண்காணிப்பு நிலையங்கள் உள்பட அரசின் பல துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
x
உள்ளாட்சி துறை சார்பில், 18 கோடியே 46 லட்சம் மதிப்பில் ஆயிரத்து 143 குக்கிராமங்களில் உள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 788 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் 45 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 25 தொடர் சுற்றுப்புற காற்று கண்காணிப்பு நிலையங்களை அவர் திறந்து வைத்தார். தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையத்தை மக்கள் எளிதில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் வகையில்     வலைத்தளம் மற்றும் சென்னை நந்தனத்தில் 73 கோடியே 17 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். Next Story

மேலும் செய்திகள்