இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கும் திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
x
புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர், 
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விளம்பர வாகனங்களை கொடியசை​த்​துது துவக்கி வைத்தார். கொரோனா தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் குறும்பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்