கிராம ஊராட்சிகளில் 5 நிலைக் குழு அமைப்பு

கிராம ஊராட்சிகளில் 5 விதமான நிலைக் குழுக்கள் அமைத்தும், அது தொடர்பான விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
கிராம ஊராட்சிகளில் 5 நிலைக் குழு அமைப்பு
x
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற்று தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராம ஊராட்சியும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலைக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.  

நியமன குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்பிரி முகடு குழு, பணிகள் குழு, கல்விக்குழு ஆகிய 5 விதமான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்,

நியமன குழுவில் தலைவர் தவிர 2 ஊராட்சி உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதர குழுக்களில் அரசு அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்கள் அல்லாத வெளி நபர்கள் 2 பேர் இருக்கலாம்.

இக்குழுக்கள் 2 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும் என ஊராட்சி தலைவர்களுக்கு அதில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்