4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
x
நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 6 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 35 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கையும்10 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது.  31 ஆயிரத்து 787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பல மாதங்களுக்கு பின் 3 ஆக குறைந்த உயிரிழப்பு

சென்னையில் பல மாதங்களுக்கு பின் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 3 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 240 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரம் படி சென்னையில் மட்டும் 10 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்