ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
x
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி விசாரணை ஆணையம்  அமைக்கப்பட்டது. 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என்று  154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில்,  மருத்துவ குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்பலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், 8 வது முறையாக  கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், ஆணையத்தின் கால அவகாசத்தை 9 வது முறையாக மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற தடை காரணமாக,கடந்த 21 மாதங்களாக விசாரணை நடைபெறாத நிலையில், கால அவகாசம் தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்