பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
x
பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துள்ள அவர், பட்டாசுத் ஆலைகளில் பணிபுரிவோரின் பாதுகாப்பு விஷயத்தில் அரசு தொடர்ந்து அலட்சியமாக இருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தீபாவளிப் பண்டிகை நேரத்தில்  பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அ.தி.மு.க. அரசைக் கேட்டுக் கொண்டுள்ள அவர், உயிரிழந்த குடும்பங்களுக்கு அதிக நிதி உதவியை அளிப்பதுடன், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்