கண்களுக்கு குளிர்ச்சி, காண்போருக்கு மகிழ்ச்சி"' நிலச்சரிவை தடுக்கும் காட்டு சூரிய காந்தி பூச்செடிகள்
குன்னூரில், நிலச்சரிவை தடுக்கும் திறன்கொண்ட காட்டு சூரியகாந்தி பூச்செடிகள் பூத்துக் குலுங்குகின்றன
நீலகிரி மாவட்டம் குன்னுாரில், ஆங்கிலேயர் காலத்தில், நிலச்சரிவை தடுக்கும் வகையில், காட்டு சூரியகாந்தி விதைகள் தூவப்பட்டன. இந்த பூச்செடிகள் வறட்சியிலும் பூத்துக் குலுங்கும். மேலும் மண்ணின் உறுதித் தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும். வழக்கமாக, நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கும் இந்த பூக்கள், இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பூத்துள்ளன. வாசமில்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் மஞ்சள் வண்ணத்தில், காண்போரை வசீகரிக்கிறது.
Next Story

