"வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்து விட வேண்டாம்" - திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை

தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்து விட வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மண்டல வாரியான ஆலோசனை கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தெற்கு மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டதாகவும், வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்து விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்தும் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்