நடிகர் விஜய்சேதுபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - "மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை வேண்டும்"

நடிகர் விஜய்சேதுபதி குடும்பத்தினர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடிகர் விஜய்சேதுபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை வேண்டும்
x
நடிகர் விஜய்சேதுபதி குடும்பத்தினர் குறித்து அவதூறு கருத்து  வெளியிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதில் இருந்து, விஜய்சேதுபதி விலக கோரிக்கை வலுத்தது. அவரும் படத்தில் இருந்து விலகினார். எனினும், விஜய் சேதுபதி குடும்பத்தினர் மீது தகாத வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே மாணவர் அமைப்பினர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவதூறு பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரினர்.


Next Story

மேலும் செய்திகள்