ஆத்திரத்தில் பெரியப்பாவை வெட்டிக் கொன்ற கொடூரம் -செய்வினை வைத்ததால் கொலை செய்தேன் என வாக்குமூலம்

நெல்லையில் தந்தைக்கு செய்வினை வைத்து முடக்கியதாக நம்பிய மகன் தன் பெரியப்பாவை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்திரத்தில் பெரியப்பாவை வெட்டிக் கொன்ற கொடூரம் -செய்வினை வைத்ததால் கொலை செய்தேன் என வாக்குமூலம்
x
நெல்லையில் தந்தைக்கு செய்வினை வைத்து முடக்கியதாக நம்பிய மகன் தன் பெரியப்பாவை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி அருகே உள்ளது வட்டக்கிணறு கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி. கட்டிடப் பணிகளுக்கு  தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிக்கு அனுப்பும் வேலை செய்து வந்தார். இவரது தம்பி சண்முகவேல் விவசாயம் செய்து வந்தார். வயல்வெளிகளில் திடமாக வேலை பார்த்த சண்முகவேல், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்துள்ளார். நன்றாக இருந்த தந்தை திடீரென இந்த நிலைக்கு ஆளானதற்கு பெரியப்பா சுடலைமணி  செய்வினை வைத்திருக்கலாம் என நம்பினார் சண்முகவேலின் மகன் முத்துக்குமார். இதையடுத்து தன் பெரியப்பாவை பார்க்கும் போதெல்லாம் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார் முத்துக்குமார். சில மாதங்களுக்கு முன் தன் பெரியப்பாவை அரிவாளால் வெட்டியதாக முத்துக்குமார் மீது காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றும் உள்ளது. இந்த சம்பவத்தால் முத்துக்குமார் குடும்பம், வட்டக்கிணறு பகுதியில் இருந்த வீட்டை காலி செய்து விட்டு ராமையன் பட்டிக்கு சென்றுள்ளது. ஆனால் அங்கு போனாலும் கூட, தன் பெரியப்பாவுடன் முட்டலும் மோதலுமாக இருந்துள்ளார் முத்துக்குமார். இந்த சூழலில் தச்சநல்லூர் அருகே உள்ள குளத்தின் அருகே தன் நண்பர்களோடு காத்திருந்தார் முத்துக்குமார். அப்போது அந்த வழியாக வந்த சுடலைமணியை 4 பேர் கொண்ட அந்த கும்பல் கொடூரமாக வெட்டிச் சாய்த்தது. இதில் சுடலைமணி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மானூர் புறக்காவல் நிலையத்தில் முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ராம்சூர்யா, தெய்வேந்திரன், ஹரிகரன் உள்ளிட்ட 4 பேரும் சரண் அடைந்தனர். விசாரணையின் போது, தன் தந்தையை செய்வினை வைத்து முடக்கிப் போட்டதால் பெரியப்பா என்று கூட பார்க்காமல் வெட்டிக் கொன்றேன் என திரும்ப திரும்ப கூறிவந்துள்ளார் முத்துக்குமார். நெல்லை அருகே நடந்த இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்