"விவசாயிகளின் வாழ்வும் சேறும், சகதியும் கலந்தது" - அமைச்சர் காமராஜ்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாட்டில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நனைந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டார்.
x
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாட்டில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், நேரடி நெல் கொள்முதல்  நிலையத்தில் நனைந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டார்.  ஒரத்தநாடு சுற்றுப்பகுதி கொள்முதல் நிலையங்களில், உள்ள நெல் மூட்டைகள், தொடர்மழையில் நனைந்து நாசமாயின. இதனிடையே, ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ், திமுக தலைவர் ஸ்டாலின், விவசாயிகள் குறித்து டுவிட்டரில் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஆயிரத்து 950 ரூபாய் வழங்குவதாக கூறிய அவர், விவசாயிகளின் வாழ்வு சேறும் சகதியும் கலந்தது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்