நெல் கொள்முதலை விரைவுபடுத்த நடவடிக்கை தேவை - தினகரன் கோரிக்கை

விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல் கொள்முதலை விரைவுபடுத்த நடவடிக்கை தேவை - தினகரன் கோரிக்கை
x
விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து  அவர் தமது டிவிட்டர் பதிவில், முதலமைச்சர் பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத்  திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக குறிபிட்டுள்ளார். இதற்கு மேலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள் முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்