தமிழக காங்கிரஸ் சார்பில் தேனியில் போராட்டம் - தமிழக காங்கிரஸ் சார்பில் தேனியில் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கே.எஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக காங்கிரஸ் சார்பில் தேனியில் போராட்டம் - தமிழக காங்கிரஸ் சார்பில் தேனியில் போராட்டம்
x
தேனி மாவட்டத்தில் உழவன் உரிமை மீட்பு போராட்டம் நடத்துவதாக தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்த போராட்டக் கூட்டத்திற்கு போலீசார் தொடர்ந்து அனுமதி மறுத்த நிலையில்,  தேனி மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு சிலை வரை பேரணியாக செல்ல காங்கிரஸ் கட்சியினர் முயன்றனர். அப்போது, கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த இடத்தில் போலீசாருக்கும் காங்கிரஸுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது ஒரு சிலர் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி உட்பட சுமார் 200 காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர் 


Next Story

மேலும் செய்திகள்