செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு - கிருஷ்ணா நதி நீர் மீண்டும் திறப்பு

கிருஷ்ணா நதி நீரின் வருகையால் செம்பரம்பாக்கம் ஏரி, நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
x
தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மழை அதிகமாக பெய்து வருவதால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் நீர் மட்ட உயரம் 16.31 அடியாகவும், நீர் இருப்பு1780 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.  ஏரிக்கு தொடர்ந்து 480 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து குடிநீர் தேவைக்காக தினந்தோறும் 59 கன அடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது பெய்த மழையால் ஏரி சற்று நிரம்பினாலும் முழுக்க, முழுக்க கிருஷ்ணா நதி நீரால் மட்டுமே தற்போது ஏரி முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்