"தனித்து அல்லது கூட்டணி அமைப்பது குறித்து கமலுக்கு அதிகாரம்"- சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்

வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி அல்லது ஒத்த கருத்துள்ள கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பை, மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனுக்கு வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனித்து அல்லது கூட்டணி அமைப்பது குறித்து கமலுக்கு அதிகாரம்- சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்
x
அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டம், கமல் ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. சுமார் 2 மணி நடைபெற்ற கூட்டத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  அதில் வரும்  2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்த முடிவு எடுக்க, கமலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, தேர்தல் பணிக்குழு அமைப்பது, கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பு, அக்கட்சியின் தலைவர் கமலஹாசனுக்கு வழங்கப்படுவது உள்ளிட்ட  தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்