"5 புதிய மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நிர்வாக வசதிகளுக்காக உள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
5 புதிய மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்
x
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக வசதிக்காக தனி உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சாகு தெரிவித்துள்ளார். அவற்றின் மூலம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு தகவல் தரவு மையம் ஆகியவற்றை பராமரிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தனி தேர்தல் பிரிவு அந்த புதிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியர்கள்,  மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்