கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிட கோரி வழக்கு - வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள்

தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிட கோரி வழக்கு - வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள்
x
தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. மதுரையைச் சேர்ந்த லூயிஸ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழகம் முழுவதும் பேருந்து, உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்திருப்பது சட்டவிரோதம் என தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விசாரணையை நவம்பர் 10ந்தேதிக்கு ஒத்திவைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்