தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
x
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலுக்கு கடும் மாசு விளைவிக்கிறது என்பது உறுதி படுத்தப்பட்ட நிலையில், அதை கருத்தில் கொண்டே, ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தி உள்ளதாக தமிழக அரசு தனது மனுவில் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஒரு சாரரின் வாதத்தை கேட்டு ஒருதலைபட்சமாக முடிவெடுத்துள்ளது என, ஸ்டெர்லைட் நிர்வாகம்  குற்றம் சாட்டியுள்ளது, ஒரு கிரிமினல் அவமதிப்பு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை, இந்த ஒரு காரணத்துக்காவே கூட தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தனது பதில் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்