அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பாவை நீக்க கோரி திமுக சார்பில் போராட்டம்

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்க கோரி சென்னையில் தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. தங்களது கோரிக்கை வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை தி.மு.கவில் கையில் ஏந்தி நின்றனர். இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா இருப்பதாக கூறிய அவர்கள், இந்த விவகாரத்தில் மாநில அரசின் உரிமை பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். அண்ணா பல்கலைக் கழக விஷயத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக அரசு, உடனடியாக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும் என தி.மு.கவினர் வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்