விஜயகாந்த், தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - புரளி கிளப்பிய நபர் குறித்து போலீஸ் விசாரணை

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
x
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர், விஜயகாந்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரிய வந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபர் அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அவரது வீடு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. 

நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

"https://www.youtube.com/embed/2KjZMFR9vN0?rel=0" height="360px" width="100%" />

Next Story

மேலும் செய்திகள்