ஊராட்சி தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் : ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட், கைது

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ளார்.
x
கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில்,  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ளார். கடந்த  ஜூலை மாதம் 17ஆம் தேதி நடந்த கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், தெற்குதிட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள துணை தலைவர் மோகன்ராஜை, போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்