கணவரான எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல சவுந்தர்யாவுக்கு அனுமதி - திருமண விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருமண விவகாரத்தில் கணவரான எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல அனுமதி அளித்து சவுந்தர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு- சவுந்தர்யா திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி தனது மகளை திருமணம் செய்ததாக கூறி சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம்,  சவுந்தர்யா மற்றும் அவரது தந்தை இருவரும் கலந்துபேசி இறுதி முடிவை அறிவிக்க நீதிபதிகள் அவகாசம் அளித்தனர். இந்நிலையில் கணவருடன் செல்ல சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததை அடுத்து, நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

"எம்.எல்.ஏ. பிரபு துரோகம் செய்துவிட்டார்..." - சுவாமிநாதன், சவுந்தர்யாவின் தந்தை

எம்.எல்.ஏ. பிரபுவோடு சென்ற தனது மகள் சவுந்தர்யா, தன்னுடன் வர மறுத்துவிட்டதாக அவரது தந்தை சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்