அரசுடன் பேசி முடிவு;அதிகாரிகள் உறுதி - ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்ட போக்குவரத்து ஊழியர்கள்

அரசுடன் பேசி முடிவு எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.
அரசுடன் பேசி முடிவு;அதிகாரிகள் உறுதி - ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்ட போக்குவரத்து ஊழியர்கள்
x
அரசுடன் பேசி முடிவு எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர். சம்பள பிடித்தத்தை திரும்ப வழங்க வேண்டும், சுழற்சி முறையில் பணி வழங்கல் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து அதிகாரிகளுடன், தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், அரசுடன் பேசி முடிவெடுப்பதாக உறுதியளித்ததால், ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில், வரும் 19 முதல் 22 ஆம் தேதி வரை பணிமனைகளில் வாயிற் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்