பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்பு நவ.1ல் துவக்கம் - பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இன்றுமுதல் கலந்தாய்வு

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்பு நவ.1ல் துவக்கம் - பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இன்றுமுதல் கலந்தாய்வு
x
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 1 ந் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று, அவர்களுக்கான ஒதுக்கீடு முடிந்தது. இதையடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில்  தகுதி பெற்ற 1 லட்சத்து 12ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். முதல் கட்ட கலந்தாய்வில் 
12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாதம் 27ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும்  பொதுப்பிரிவு கலந்தாய்வு குறித்த விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர் சேர்க்கை பணிகள் இம்மாத இறுதிக்குள் முடித்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும் என்றும் , கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்வதற்கு நவம்பர் 16 கடைசி நாள் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் சிறப்பு பிரிவு கலந்தாய்வு - 7150 இடங்களில் 497 பேர் மட்டுமே தேர்வு 

இளங்கலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில், 497 மாணவர்கள் மட்டுமே தேர்வாகி உள்ளனர். இந்த பிரிவுக்கான மொத்த இடம் 7 ஆயிரத்து 150ல் தற்போது 6 ஆயிரத்து 653 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் காலியாக உள்ள இடங்கள் பொது கலந்தாய்விற்கு கொண்டுச் செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்