பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் எடுப்பு - நிலம், உரிய இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு
ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல்மின் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தியதில், பாதிக்கப்பட்ட 13 கிராம விவசாயிகள் கடைசி முயற்சியாக நரபலி போராட்டம் அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 9,500 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களை தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகம் கையகப்படுத்தியது. இதில், கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு வழங்கப்படவில்லை என விவசாயிகள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்குகளின் விசாரணையை மேற்கொண்ட, 2 சிறப்பு நீதிமன்றங்கள் நிலங்களுக்கு உரிய விலை மற்றும் வட்டியுடன் 6 முதல் 8 லட்சம் வரை நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிட்டது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், இதுவரை உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது, நிலமும் கிடைக்காமல், உரிய தொகையும் கிடைக்காமல் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் விவசாயிகள் கடைசி முயற்சியாக நரபலி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொந்த நிலங்கள் இருந்தும், அகதிகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவர்கள், தங்களுக்கு ஞாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

