கமுதி அருகே கிராம சபை கூட்டம் - வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
x
கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் முககவசம் அணிந்து பங்கேற்றனர். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை  கண்டித்தும், கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் வழங்குதல், பயிர் காப்பீடு தொடர்பாக  5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களிடம் 
கையெழுத்து பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஊராட்சி தலைவர் காவடி முருகன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்