"தமிழகத்தில் இடைத்தேர்தல் இப்போது இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
x
காலியாகவுள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான 6 மாத 
அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள்  தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

மேலும், அண்மையில் காலியான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்