விவசாயிக மசோதாக்கள் விவகாரம்: "நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" - கமல்ஹாசன் எச்சரிக்கை

விவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
விவசாயிக மசோதாக்கள் விவகாரம்: நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் - கமல்ஹாசன் எச்சரிக்கை
x
விவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். கொரோனா வீழ்ச்சியிலும் நாடு வீழாமல், வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்தது நாட்டின் முதுகெலும்பான விவசாயத் துறை மட்டுமே என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி உள்ளார். அத்தகைய விவசாயிகளின் நலன் காப்பதே நம் கடமை என்று தமது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.   தமிழக அரசு உடனடியாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் இந்த சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விவசாயிகள் நலனை பாதுகாக்கும் சட்ட திருத்தங்களுடன், இந்த சட்டங்கள் நன்மை பயக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், இதனை செய்ய மத்திய அரசு தவறும் நிலையில், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்  என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்