கந்து வட்டி கேட்டு மிரட்டல் - பிரதமரின் பாராட்டு பெற்ற சலூன் கடை உரிமையாளர் மீது புகார்

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
x
மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  மோகன் மகளின் கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொரோனா நிதிக்காக வழங்கியிருந்தார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியிலும் பாராட்டை பெற்றிருந்தார்.  மோகன் தன்னிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கங்கை ராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். மருத்துவ செலவுக்காக தான் வாங்கிய ரூ.30,000 ரூபாயை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டதாகவும், பின்னரும் மோகன் பணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாகவும் கங்கை ராஜன் புகாரில் தெரிவித்துள்ளார்.  இதன் பேரில் மதுரை அண்ணா நகர் போலீசார் மோகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து மோகன் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்