கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை - 30,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு

கொரோனா பரவல் நிலையை கண்டறிய, தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
x
அண்மையில் ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைப்படி SERO சர்வே என்ற பெயரில் ஆன்டிபாடி பரிசோதனைகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன. அதேபோல் சுகாதாரத் துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆன்டிபாடி பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆய்வு, அடுத்த வாரம் தொடங்கப்படும் என்றும், இதற்காக 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகம் நோய் பாதித்த மாவட்டங்களில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், முன் களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த சோதனையை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் எந்தப் பகுதிகளில் அதிக பட்சமாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறதோ, அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்