தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை
x
டெல்லியில் உள்ள  தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த தி.மு.க. எ​ம்.பி. கதிர் ஆனந்திடம் நேற்று  பிற்பகல் 1.40 மணி அளவில் உளவுத் துறை அதிகாரிகள் என தெரிவித்து 2 பேர், முன் அனுமதியின்றி சந்திக்க வந்துள்ளனர். மேலும், அவையில் இன்று என்ன பேச திட்டம் என கேட்டு தம்மை அச்சுறுத்தியதாக, மக்களவையில் தி.மு.க. எம்.பி. புகார் அளித்தார்.  ஆதாரம் இருந்தார் புகார் தெரிவிக்க வேண்டும் என   சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை அடுத்து சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்