மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை: நிபுணர் குழு நாளை கருத்து கேட்பு - பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்க அழைப்பு

புதிய கல்வி கொள்கை தொடர்பாக, உயர்க்கல்வித்துறை நாளை பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துகளை கேட்க முடிவு செய்துள்ளது.
x
புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் கீழ் இயங்கும் 15 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன்  ஆலோசனை நடத்தியது. 
அடுத்தக்கட்டமாக பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்துகளை கேட்க உயர்க்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை ஆன்-லைன் வழியில் கருத்துக்களை கூறலாம் என தெரிவித்துள்ளது. மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் அளிக்கக்கூடிய கருத்துக்களின் அடிப்படையில் தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்