கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு - உணவு தானியக்கடைகளில் மட்டும் விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் நான்கு மாதங்களுக்கு பிறகு உணவு தானியம் மற்றும் மளிகை கடைகள் மட்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
x
கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 5-ஆம் தேதி முதல் சென்னை கோயம்பேடு சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. இதில், காய்கறி, பழம், பூ ஆகிய விற்பனைக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், 135 நாட்களுக்கு பிறகு முதற்கட்டமாக உணவு தானியம் மற்றும் மளிகை கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. சந்தைக்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தல், வியாபாரிகளின் உடல் வெப்பநிலை ஆய்வு செய்தல் , வணிக வளாகத்தில் அவ்வப்போது கிருமி நாசினியால் சுத்தம் செய்வது உள்ளிட்ட செயல்முறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக வருகிற 28ஆம் தேதி திருமழிசையில் செயல்படும் காய்கறி சந்தை, மீண்டும் கோயம்பேடுக்கு மாற்றப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்