அமைச்சர் பங்கேற்ற பாசறை கூட்டத்தில் ரகளை - அதிமுக நிர்வாககள் மீது வழக்கு

திருச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி பங்கேற்ற பாசறைக்கூட்டத்தில் ஏற்பட்ட ரகளையைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் உள்பட 106 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பங்கேற்ற பாசறை கூட்டத்தில் ரகளை - அதிமுக நிர்வாககள் மீது வழக்கு
x
திருச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி பங்கேற்ற பாசறைக்கூட்டத்தில் ஏற்பட்ட ரகளையைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் உள்பட 106 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பகுதியில் நேற்று நடந்த அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறைக் கூட்டத்தில் பதவி கிடைக்காத அதிமுகவினர் புகுந்து, ரகளை செய்து தாக்குதலில் ஈடுபட்டனர். அமைச்சர் கண்ணெதிரே நடந்தேறிய இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக அதிமுக மீனவரணி செயலாளர் கண்ணதாசன், அவரது உறவினர் திலீப், சதீஷ், அன்பு, சுகுமாறன் உள்ளிட்ட, 106 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்