நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதி முறைகள்

நாளை 13ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதி முறைகளை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
x
ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் வந்து விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு மையம் விவரத்தை ஒருநாள் முன்கூட்டியே மாணவர்கள் கண்டறிய வேண்டும். விண்ணப்ப பதிவிற்கு பயன்படுத்திய அதே பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையே தேர்வு மையத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்று மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக
மாணவர்கள் 50 மில்லி லிட்டர் சானிடைசரை  உடன் எடுத்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகக்கவசம் , கை உறைகள் ஆகியவற்றை  மாணவர்கள் அணிந்து வர வேண்டும்.

அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவை பான் கார்டு , ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை,  பாஸ்போர்ட், பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ஹால் டிக்கெட்,  ஆதார் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். கொரோனா தொற்று காரணமாக இம்முறை தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்துவர மாணவர்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது

மொபைல் போன் உட்பட எந்தவொரு எலக்ட்ரானிக் பொருட்களையும் தேர்வு மையத்திற்கு மாணவர்கள் எடுத்து வர கூடாது. தேர்வு முடிவதற்கு முன்பாக தேர்வு அறையை விட்டு வெளியே செல்லவும் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்