நீட் தேர்வு அச்சம் - மதுரையில் மாணவி தற்கொலை

அரியலூர் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் நீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
நாடு முழுவதும் நாளை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வு அச்சத்தால் கடந்த சில நாட்களாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கிறது. 

இந்நிலையில், மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவி, நீட் தேர்வுக்காக படித்து வந்தார். 19 வயதான மாணவியின் தந்தை முருகசுந்தரம் காவல் சார்பு ஆய்வாளராக உள்ளார்.  6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வு அச்சம் காரணமாக ஜோதி ஸ்ரீ துர்கா இன்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வால் தொடரும் தற்கொலை சம்பவங்கள் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன், மாணவி ஜோதிஸ்ரீ பேசிய உருக்கமான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்