நடிகர் வடிவேல் பாலாஜி உயிரிழப்பு - தனியார் மருத்துவமனைகளில் அலைக்கழிக்கப்பட்டாரா?
பதிவு : செப்டம்பர் 11, 2020, 08:45 PM
நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்த நடிகர் வடிவேல் பாலாஜி, இறுதி நாட்களில் தனியார் மருத்துவமனைகளில் அலைக்கழிக்கப்பட்டு உயிரிழந்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரையை சேர்ந்த பாலாஜி, சினிமா மீதான ஈர்ப்பால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க ஆயத்தமாகி சின்னத்திரைக்குள் வந்தார்... 

ஆரம்ப காலங்களில் பெண் வேடமிட்டும், விதவிதமான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், வடிவேல் பாலாஜி தன் பெயரை நிலை நிறுத்தினார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். 

வடிவேலுவை போலவே தன் உடல் மொழியையும், நகைச்சுவை உணர்வையும் மெருகேற்றிக் கொண்ட அவர், சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 

பின்னர் கோலமாவு கோகிலா, யாருடா மகேஷ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து சினிமா நடிகராக உயர்ந்தார். 42 வயதான இவர், வெளிநாடுகளுக்கும் சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தி ஏராளமான ரசிகர்களை பெற்றார். 

இந்த சூழலில் தான் திடீரென வடிவேல் பாலாஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மூளையில் ரத்தக் கசிவு, பக்கவாதம், மூச்சுத் திணறல், இதய துடிப்பு குறைந்து போனது என பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் மாரடைப்பால் தான் மகன் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார் அவரது தாய் திலகவதி. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி தந்தும் மகனை காப்பாற்ற முடியவில்லை என வேதனை தெரிவிக்கிறார் அவரின் தாய்... 

பின்னர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்படவே, ஓமாந்தூரார் அரசு மருத்துமனைக்கு  கொண்டு  செல்லப்பட்டிருக்கிறார். பின்னர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், திடீரென தன் மூச்சை நிறுத்தினார்...

கிட்டத்தட்ட 15 நாட்களாக 5 மருத்துவமனைகளுக்கு வடிவேல் பாலாஜி அலைக்கழிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. எப்படியும் வடிவேல் பாலாஜியை காப்பாற்றியே தீருவோம் என துடித்த உறவினர்கள் அவரின் மரணச் செய்தியால் உடைந்து போய்விட்டனர். 

நடிகர் வடிவேல் பாலாஜிக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தந்தையின் மறைவு செய்தியை கேட்டு அவர்கள் கதறி அழுத காட்சி பார்ப்போரின் கண்களையும் குளமாக்கியது... 

சின்னத்திரையில் பல வருடங்களாக வடிவேல் பாலாஜியுடன் பயணித்த நடிகர் ரோபோ சங்கர், நடிகர் ராமர், தாடி பாலாஜி, சேது உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

 மேலும் நடிகர் விஜய் சேதுபதி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேநேரம் நடிகர்கள் தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்களும் வடிவேல் பாலாஜியின் மரணச் செய்தியை கேட்டு இரங்கல் தெரிவித்தனர்...

பலரையும் சிரிக்க வைத்து அதில் மனநிறைவு கண்ட ஒரு கலைஞன், இன்று அவர்களை மீளாத்துயரில் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்... 

தொடர்புடைய செய்திகள்

வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பிரபலங்கள்

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நுங்கம்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

23776 views

பிற செய்திகள்

நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் - Me too இயக்கத்தில் பரபரப்பை கிளப்பிய நடிகை பாயல் கோஷ்

பாலிவுட்டில் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மீ டூ இயக்கத்தின் கீழ் பாலியல் புகார் தெரிவித்திருப்பது திரை உலகில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது...

135 views

மிஷ்கின் இயக்கும் 'பிசாசு-2'

பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் பிசாசு-2 படத்தை இயக்குகிறார்.

16 views

உணவு உட்கொள்ள தொடங்கிவிட்டார் எஸ்.பி.பி.,- எஸ்.பி.பி. சரண்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உணவு உட்கொள்ள தொடங்கியுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

25 views

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

173 views

நீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

609 views

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை இனையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

20660 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.