விசாரணையின் முடிவில் சிபிசிஐடி முடிவெடுக்கும் - ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் விவகாரத்தில் அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நடராஜன் மீது கொலை வழக்கு பதிய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
x
பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டர் தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை கோரியும், மறு பிரேத பரிசோதனை கோரியும் தாயார் கோவிந்தம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் எழும்பூர் மாஜிஸ்திரேட் அறிக்கையும், சிபிசிஐடி விசாரணையின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது ,  பிரேத பரிசோதனை அறிக்கையை பார்க்கும்போது, தற்காப்புக்காக சுட்டதாக தெரியவில்லை என்றும், திட்டமிட்ட படுகொலையை செய்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி,  இந்த வழக்கில் பிரிவுகளை மாற்ற வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு பிறகுதான் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்