திருமணமான 3 நாளில் பிரிந்த காதல் மனைவி - கணவர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் திருமணமான மூன்று நாட்களில் காதல் மனைவி, பிரிந்து சென்றதால், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான 3 நாளில் பிரிந்த காதல் மனைவி - கணவர் தூக்கிட்டு தற்கொலை
x
கோவை பேரூர் அடுத்த சென்னனூரை சேர்ந்த வெல்டிங் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கோவிந்தராஜ் மஞ்சுளா என்ற பெண்ணை, பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 4 ஆம் தேதி காதல் திருணம் செய்து கொண்டார். இந்த நிலையில், கடந்த 7 ஆம்தேதி மஞ்சுளாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார், கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு, மஞ்சுளாவுடன் ஒரு மணி நேரம் பேசிய அவரது பெற்றோர்கள், மூளைச்சலவை செய்த, நிலையில், மஞ்சுளா கணவருடன் வாழ விருப்பமில்லை என எழுதி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றுள்ளார்.  இதனால் முற்றிலும் மனம் உடைந்த கோவிந்தராஜ், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, மஞ்சுளாவின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கோவிந்தராஜின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு  ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்