அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை பொறுத்தவரை, கேரள கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகள், குமரிக்கடல்,  மன்னார் வளைகுடா பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்