தொடர் வேலைகளால் மன அழுத்தம் - 8வது மாடியில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை
சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் 8வது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த பல மாதங்களுக்கும் மேலாக தொடர் வேலைகளால் பிரபாகரன் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரம் உடன் பணிபுரியும் ஒருவர் தனக்கு அதிகம் தொல்லை கொடுத்ததே தன்னுடைய முடிவுக்கு காரணம் என பிரபாகரன் வெளியிட்ட வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Next Story