தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 81 ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 684 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது,.
x
தமிழகத்தில் இன்று 81 ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 684 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது,. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 940 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 6 ஆயிரத்து 599 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 50 ஆயிரத்து 213 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


சென்னையில் மேலும் 988 பேருக்கு கொரோனா பாதிப்பு 

சென்னையில் இன்று 988 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 696பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் இன்று ஆயிரத்து 97 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 18 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சென்னையில் 11 ஆயிரத்து 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்