இ-பாஸ் முறையில் அனுமதிக்கப்படும் சுற்றுலா பயணிகள் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் பேட்டி

வெளி மாவட்டங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் உள்ளூர் மக்கள் ஆதார் அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இ-பாஸ் முறையில் அனுமதிக்கப்படும் சுற்றுலா பயணிகள் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் பேட்டி
x
வெளி மாவட்டங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் உள்ளூர் மக்கள் ஆதார் அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ண விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, குன்னூர் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இ - பாஸ் முறையில் குறிப்பிட்ட அளவிலான சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களை திறக்க தமிழக அரசு படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்