நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவர்கள் : "உண்மை சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்" - வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 2 மாணவர்கள், தங்களின் உண்மைச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 2 மாணவர்கள், தங்களின் உண்மைச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, ரிஷிகாந்த் இருவரும், தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுக்களை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். மாற்றுச் சான்றிதழை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் பட்சத்தில் அதனையும் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
Next Story