"பார் உரிமம் கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும்" - தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

பார் உரிமம் கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பார் உரிமம் கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும் - தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
x
பார் உரிமம் கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் இயங்கக்கூடிய டாஸ்மாக் கடைகளுக்கு அருகில், அரசு உரிமத்துடன் மது அருந்தும் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால், பார் உரிமையாளர்கள் பெருமளவில் இழப்பை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர். எனவே, அடுத்த ஆறு மாதத்திற்கு பார்களுக்கான உரிமம் கட்டணத்தை, பாதியாக குறைக்க வேண்டுமென டாஸ்மாக் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்