தமிழகத்துக்குள் 7ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியது

தமிழகத்தில், 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியது.
x
சென்னை எழும்பூர் -  செங்கோட்டை இடையே திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மார்க்கமாக, வருகிற 10 தேதி முதல் வாரம் 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.  இதுபோல, சென்னை எழும்பூர் - கன்னியகுமரி இடையே வருகிற 8 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதே போல், சென்னை  சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே வருகிற 8 ஆம் தேதியில் இருந்தும், திருச்சி - நாகர்கோவில் இடையே 7 ஆம் தேதி முதலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ​தமிழகத்துக்குள் மொத்தம் 13 சிறப்பு  ரயில்கள் இயக்கப்படும் நிலையில், அதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. பயணத்தின்போது உறுதிப்படுத்தப்பட்ட பயண சீட்டுடன் முக கவசம், அணிந்து 90 நிமிடங்களுக்கு முன்பு ரயில் நிலையம் வருமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்