திமுக, தேமுதிக பிரமுகர்களின் வீடுகள் மீது முன்விரோதம் காரணமாகவெடிகுண்டு தாக்குதல் - பேர் கைது

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் முன்விரோத தகராறில் திமுக, தேமுதிக பிரமுகர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக, தேமுதிக பிரமுகர்களின் வீடுகள் மீது முன்விரோதம் காரணமாகவெடிகுண்டு தாக்குதல் - பேர் கைது
x
பெரும்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகர் பரங்கிமலை ஒன்றிய தேமுதிக துணை செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவருக்கும் வெகு காலமாக தகராறு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டின் அருகே ராஜசேகர் நின்றிருந்த போது , அவர் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். பிறகு சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டினர். ரத்த வெள்ளத்தில் துடித்த ராஜசேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து வீரபத்திரன் நகரில் உள்ள திமுக பிரமுகரும் வழக்கறிஞருமான மனோநிதி வீட்டில் ,  2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர். போலீஸ் விசாரணையில் ராஜசேகரை வெட்ட அருளுக்கு உதவியதற்காக, ராஜசேகரின் உறவினர் ராஜேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மனோநிதி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசியது தெரியவந்தது. சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் அருள் அவரது நண்பர்கள் அருண்குமார், விக்னேஷ், அரவிந்த் ,  ரோஜின் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் திமுக பிரமுகர் மனோநிதி வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில்  ராஜேஷை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்