ஆன்லைன் கல்வி : தொடரும் மாணவர்கள் தற்கொலை - பேரவையில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

ஆன்லைன் கல்வி முறையால் தொடர் மாணவர்கள் தற்கொலை உள்ளிட்ட பல பிரச்சினைகளை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஆன்லைன் கல்வி : தொடரும் மாணவர்கள் தற்கொலை - பேரவையில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
x
தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 14ஆம் தேதி, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. நான்கு நாட்கள் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரச்சினை, ஆன்லைன் கல்வி முறையால் தொடரும் மாணவர்கள் தற்கொலை, புதிய கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டும், மொழி கொள்கை, வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்பட பல முக்கிய பிரச்சினைகளை எழுப்ப வாய்ப்புள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்