எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீர் தீ விபத்து

திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீர் தீ விபத்து
x
திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த ஏசி, பிரிட்ஜ், வாசிங் மிசின் போன்ற பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள்  எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்