மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி : சுங்க கட்டணம் உயர்வு - பொதுமக்கள் வேதனை

தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ரூபாய் 5 முதல் ரூபாய் 10 வரை கட்டணம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி : சுங்க கட்டணம் உயர்வு -  பொதுமக்கள் வேதனை
x
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ரூபாய் 5 முதல் ரூபாய் 10 வரை கட்டணம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தியில் உள்ள சுங்கசாவடியில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. இங்கு 5 முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், 16- ஆம் தேதி முதல் 26 வரை சுங்கச்சாவடிகளில் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே,  கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்த தங்களுக்கு, சுங்க கட்டண உயர்வு மேலும் சுமையை அளிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 


சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது - அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்?

தமிழகம் முழுவதும் உள்ள 21-சுங்க சாவடிகளில், 5முதல் 15 சதவீதம் வரை கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வால், லாரி உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி  உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 10-சக்கர லாரிகளுக்கு 230-ரூபாயும், 14-சக்கர வாகனங்களுக்கு 330-ரூபாயும், 16-சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 405-ரூபாயும் வசூலிக்கப்படும் நிலையில், இன்று முதல்  மீண்டும் சுங்க கட்டணம் அதிகரித்து உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறும் அபாயம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்